நடிகர் சிலம்பரசன் நடிக்கும் STR48... அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்...

Cinemania24x7tv
0
நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக நடிக்கும் எஸ்டிஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. 

இயக்குநர் ஒபெலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் பத்து தல திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் கன்னட மொழியில் வெளியான மப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். பத்து தல திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 
பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் அவருடயை 48வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 48வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.டி.ஆர் 48 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 48 திரைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். எஸ்டிஆர்48 திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கவுள்ளார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. நடிகர் சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 48 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்டிஆர்48 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் 22ம் தேதி தொடங்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. 
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)

Tags

Subscribe Us