நலமா... மாஸான கெட்டப்பில் நடிகர் சூரியா... இணையத்தில் வைரலாகும் கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ...

Cinemania24x7tv
0
நடிகர் சூரியா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

நடிகர் சூரியா தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் கங்குவா ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜகபதி பாபு, ஆனந்த்ராஜ், யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தேவி ஸ்ரீபிரசாத் அவர்கள் கங்குவா திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து கங்குவா திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை 12.01 மணிக்கு கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

கங்குவா திரைப்படத்தின் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர் சூரியா அவர்கள் மாஸான கெட்டப்பில் இருக்கிறார். கங்குவா திரைபடத்தின் இந்த டீஸருக்கு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பின்னணி பேசியுள்ளார். ஆறு மொழிகளில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)

Tags

Subscribe Us